×

ரோட்டில் தடுமாறி விழுந்த 70 வயது மூதாட்டி சாவு

திருப்புத்தூர், மார்ச் 19 : திருப்புத்தூர் அருகே நைனார்பட்டியில் நடந்து சென்றபொது கால்தடுமாறி ரோட்டில் விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.திருப்புத்தூர் அருகே நைனார்பட்டியை சேர்ந்தாவர் ஆண்டியப்பன் மனைவி கென்கச்சி(70). இவர் கடந்த மார்ச் 14ம் தேதி இரவு தனியாக அருகில் உள்ள கண்மாய் பகுதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது நடந்து வரும்போது திடீரென கால் தடுமாறி தார்ரோட்டில் கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இந்நிலையில் நேற்று அங்கு சிகிச்சை பலனின்றி கென்கச்சி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : death ,road ,
× RELATED தஞ்சையில் பயங்கரம்; 1,000 ரூபாய்க்காக...