×

புதுக்கோட்டை நகராட்சியில் ரூ.100 கோடியில் 2,500 வீடுகள் விரைவில் பொதுமக்களுக்கு ஒதுக்கீடு அமைச்சர் தகவல்

புதுக்கோட்டை,பிப்.20: புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள பொது மக்களுக்கு வீடுகள் வழங்கும் வகையில்,  ரூ.100கோடி மதிப்பில் 2,500 வீடுகள் கட்டப்பட்டு பணிகள்  முடிக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் பொதுமக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு  செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்தார்.
புதுக்கோட்டை நகராட்சி, காமராஜபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் காமராஜபுரம் பொதுமக்களுக்கு நகர நிலவரித்திட்டத்தின் சார்பில் விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களுக்கான ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கி பேசியதாவது:   
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள பொது மக்களு க்கு வீடுகள் வழங்கும் வகையில் ரூ.100கோடி மதிப்பீட்டில் 2,500 வீடுகள் கட்டப் பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் பொதுமக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளது.  
மேலும் இப்பகுதி பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே தமிழக அரசின் இத்தகைய நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் இதனை உரிய முறையில் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.

Tags : houses ,municipality ,Pudukottai ,public ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...