பாமக கண்டன ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி. பிப். 19: கும்மிடிப்பூண்டி  பைபாஸ் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதை கண்டித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.   ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்ட செயலாளர் குபேந்தரன்  தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ரவி வரவேற்றார். மாநில இளைஞர் அணி துணை பொது செயலாளர் ராசா சங்கர்,  மாவட்ட இளைஞர் அணி  அமைப்பாளர் காசி ஏகாம்பரம், பேரூர் அவைத்தலைவர் வினோத்குமார்,  பேரூர் செயலாளர் ஜெகன், வன்னியர் சங்க தலைவர் கேசவன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில துணை பொது செயலாளர் மா.செல்வராஜ்  கண்டன உரையாற்றினார்.

× RELATED பொள்ளாச்சி கொடூரம்: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம்