×

தீவிரவாதி தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு வழக்கறிஞர்கள் அஞ்சலி

ஊத்துக்கோட்டை, பிப். 19:      காஷ்மீரில் தீவிரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தியதில், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பொதுமக்கள்  அமைதி ஊர்வலம் சென்று  மலர்தூவி  அஞ்சலி செலுத்தினர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தீவிரவாதி ஒருவன் நடத்திய தற்கொலை படை  தாக்குதலில் ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு, ஊத்துக்கோட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும்  குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிமன்ற நடுவர் (நீதிபதி)  பாலகிருஷ்ணன்  தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.அதில், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செஞ்சிநாதன், செயலாளர் சாமுவேல், பொருளாளர் மகேந்திரன் மூத்த வக்கில்கள் குணசேகரன், பி.எம்.சாமி, வெற்றி தமிழன்  உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வக்கில்கள் மெழுகுவர்த்தி ஏந்தி,  நீதிமன்ற வளாக நுழைவு பகுதியில் வைக்கப்பட்டிருந்த, மறைந்த ராணுவ வீரர்களின் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, பொதுமக்கள்  அமைதி ஊர்வலம் நடந்தது. இந்த அமைதி ஊர்வலத்தில்   500  மாணவ - மாணவிகள், ஆசிரியர்கள்,  வியாபாரிகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என 1000 க்கும் மேற்பட்டோர்   பங்கேற்றனர். இவர்கள், ஊத்துக்கோட்டை அண்ணாசிலை அருகில் இருந்து,  கருப்பு பேட்ஜ் அணிந்து அமைதி ஊர்வலமாக நேரு பஜார், நேரு சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று, விஏஒ அலுவலகம் அருகே  வடைந்தடைந்தனர்.   பின்னர்,  அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மறைந்த ராணுவ வீரர்களின் படங்களுக்கு  மெழுகு வர்த்தி  ஏற்றி, மலர் தூவி மரியாதை செய்தனர்.

Tags : Terrorists ,victims ,assaults ,
× RELATED ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில்...