கிரிக்கெட் மார்பில் பந்து விழுந்து கல்லூரி மாணவன் பலி

சென்னை, பிப். 19: மறைமலை நகரை அடுத்த, கீழ்கரணை கிராமத்தை சேர்ந்தவர் மோகன் மகன் சீனிவசன் (எ) ராமச்சந்திரன் (21). சென்னை மீனம்பாக்கத்ததில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை, கூடுவாஞ்சேரி அடுத்த, ஆதனுாரில் உள்ள ஏரியில் ஆதனூர் மற்றும் மாடம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் விளையாடிய  சீனிவாசன் மார்பில், பந்து வேகமாக  விழுந்தது. இதில், அவர் சுருண்டு விழுந்தார்.இதை பார்த்ததும், அங்கிருந்தவர்கள், சீனிவாசனை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை, பரிசோதனை செய்த டாக்டர்கள், சீனிவாசன் ஏற்கனவே இறந்து விட்டதாக  கூறினர். புகாரின்படி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

× RELATED கல்லூரி மாணவி மயங்கி விழுந்து சாவு