×

பெரம்பலூர் அருகே பணம் கடத்தி வருவதாக வந்த காரை சினிமா பாணியில் பிடித்த போலீசார் தவறான தகவலால் ஏமாற்றம்

பெரம்பலூர், பிப்.15: ராமநாபுரத்திலுள்ள காரில் பணம் கடத்திவருவதாகக் கிடைத் தத் தகவலின்பேரில் பெரம்பலூர்அருகே சினிமா பாணியில் டோல்பூத்தில் சுற்றி வளைக் கப்பட்ட கருப்புநிறக் காரால் பரபரப்பு ஏற்பட்டது. பொய்யான தகவல் என்பதால் போலீசார் ஏமாந்தனர்.ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு செல்லும் கருப்புநிறக் காரில் பலகோடி மதிப்பிலான பணம் கடத்தப்படுவதாகவும், அந்தக் கார் தற்போது பெரம்ப லூர் மாவட்ட எல்லைக்குள் நுழைந்துவிட்டது, அதனை மடக்கிப்பிடியுங்கள் என அந்த மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டி பகுதி போலீசார் மூலம் பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு நேற்று ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி திஷாமித்தல் உத்தரவின்பேரில், பெரம்பலூர் டிஎஸ்பி ரவீந்திரன் 4 ரோடு பகுதிக்கு விரைந்தார். தேசிய நெடுஞ்சாலை ரோந்துப்படை போலீசாரும் உஷார் படுத்தப்பட்டனர்.

ஆனால் அதற்குள் அவர்கள் சொன்ன அடையாளங்களை கொண்ட கார் 4 ரோடு பகுதியைக் கடந்துவிட்டதாக பெரம்பலூர் டிஎஸ்பிக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து டிஎஸ்பி ரவீந்திரன், மங்களமேடு டிஎஸ்பி தேவராஜிக்குத் தகவல் கொடுத்தார். பிறகு ரவீந்திரன் ஸ்பெஷல் கிரைம்டீம் போலீசாருடன் மங்களமேடு பகுதிக்கு விரைந்துள்ளார். அங்கு டிஎஸ்பி தேவராஜ் திருமாந்துறை டோல் பகுதியில் அவர்களுக்கு கிடைத்த அடையாளங்களுடன் வந்த கருப்புநிற காரினை மடக்கி பிடித்துள்ளனர்.அதில் சென்னையில் ஷாப்பிங் மால் வைத்துள்ள தொழிலதிபரான அலாவுதீன் என்பவர் தனது நண்பர்கள் அபுபக்கர், மரக்காயர் ஆகியோருடன் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களது காரை திருமாந்துறை டோல் மைய கட்டுப்பாட்டு வளாகத்திற்குள் கொண்டு சென்று சல்லடையாக சளித்துத் தேடிப்பார்த்துள்ளனர்.

எங்குமே பணம் மறைத்து வைத்து கடத்தப்பட்டதாக கிடைத்தத் தகவல் உறுதி செய்ய முடியவில்லை. பணத்திற் கான ஆவணங்களும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இரண்டு சரக டிஎஸ்பிக்களும் ஏமாந்துபோய் மடக்கியகாரை விடுவித்துத் திரும்பினர்.கோடிக்கணக்கான பணம் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்பட்டதா அல் லது ஏதாவது சதிசெயலுக்காக கொண்டுசெல்லப்பட்டதா, அது கருப்புப்பணமா என எதுவுமே தெரியாத நிலையில், நேற்று சினிமாபோல் பெரம்பலூர் மாவட்ட  போலீசார் நடத்திய அதிரடி சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சைரன்களின் ஓசையோடு டோல் பூத்தை சுற்றி வளைத்த காட்சிகளால் வெற்றுப் பரபரப்புதான் காணப்பட்டது.

Tags : Perambalur ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...