பொன்னமராவதியில் 2இடங்களில் திடீர் தீ விபத்து வீடு, பனைமரங்கள் சேதம்

பொன்னமராவதி,பிப்.15: பொன்னமராவதியில் 2இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதில் வீடு, பனைமரங்கள் சேதமடைந்துள்ளது.
பொன்னமராவதி அரிமாநகரை சேர்ந்தவர் ராஜராஜன். இவரது வீட்டில் மின் விசிறியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. தகவல் அறிந்த பொன்ன மராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கட்டில், மெத்தை உள்ளிட்ட தளவாட பொருட்கள் எரிந்து சேத மடைந்துள்ளது. வலையபட்டி அடைக்கலம் காத்தார் கோயில் முன் உள்ள பனைமரங்களில் அணைக்கப்படாத நெருப்பு பற்றி தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.

× RELATED பல்வேறு இடங்களில் திருடுபோன 44 செல்போன்கள் மீட்பு