மணமேல்குடி அருகே இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

மணமேல்குடி,பிப்.15: மணமேல்குடி அடுத்த அந்தோணியார்புரம் கடற்கரையில் இறந்த நிலையில் டால்பின்கரை ஒதுங்கியிருப்பதாக வந்த தகவலின்பேரில், மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.
டால்பின் இறந்த நிலையில் 10அடி நீளத்துடன் 150கிலோ எடையுடன் இருந்தது .மேலும் இறந்து பலநாட்கள் ஆகியிருந்தது . உடனேகால்நடை மருத்துவ குழுவி னர் வரவழைத்து அதே இடத்தில பிரேதபரிசோதனை செய்து புதைக்கப்பட்டது.மேலும் இதுகுறித்து மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

× RELATED குழித்துறை பாலத்தில் வழிப்பறி