அவினாசி அருகே போலீஸ் ஜீப் மீது பைக் மோதி தொழிலாளி பலி

அவிநாசி,பிப்.15: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தாலுகாவை சேர்ந்தவர் நாகபாண்டியன். இவரது மகன் கார்த்திகேயன் (32). இவருக்கு ராஜலட்சுமி(28) என்கிற மனைவியும், சுபீன்(7), தருண்(4) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் அவிநாசி அடுத்து தெக்கலூர் வெள்ளாண்டிபாளையத்தில் தங்கி அங்குள்ள பனியன் ஏற்றுமதி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பனியன் நிறுவனத்தில் இருந்து பைக்கில், கோவை - சேலம் பைபாஸ் ஆறுவழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னாள் சென்ற வாகனங்களை முந்திக்கொண்டு வேகமாக சென்றபோது, ரோட்டின் ஓரமாக நின்றுகொண்டிருந்த போலீஸ் ஜீப்பின் பின்புறத்தில், எதிர்பாராத விதமாக பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயனுக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று கார்த்திகேயன் உயிரிழந்தார்.

× RELATED அவிநாசி அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு