×

திருச்செங்கோட்டில் பக்தர்கள் வசதிக்காக தங்கும் விடுதி

திருச்செங்கோடு, பிப்.15: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் திருச்செங்கோடு தொகுதி எம்எல்ஏ பொன்.சரஸ்வதி பேசியதாவது:திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில், கடந்த 2004ம் ஆண்டு முதல் உள்பிரகாரத்தில் தங்க ரதம் வலம் வந்து கொண்டிருக்கிறது. தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதால், கோயிலின் வெளிப்பிரகாரத்தில் தங்கத்தேர் வலம் வர ஆலயத்தின் வடக்குப் பகுதியில் பாதை அமைத்துத் தரவேண்டும். திருச்செங்கோட்டில் ஏராளமான தனியார் கல்லூரிகள் உள்ளன. இருந்தபோதிலும் அரசு கலைக்கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் உறுப்பு கல்லூரி அமைக்கப்பட்டால் இப்பகுதியில் உள்ள ஏழை மாணவ-மாணவிகள் வாழ்க்கையில் முன்னேற உதவிகரமாக இருக்கும். திருச்செங்கோடு நகரில்,  திருச்செங்கோட்டிற்கு, திருவிழா காலங்களில் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் தங்கி செல்ல போதிய தங்கும் விடுதிகள் இல்லை. எனவே, அறநிலையத்துறை சார்பில் தங்கும் விடுதிகள் அமைத்து தரவேண்டும். திருச்செங்கோடு ஒன்றியப் பகுதிகளான வட்டூர், கருமாபுரம், புதுப்பாளையம், திருமங்கலம், ராஜபாளையம் ஆகிய பஞ்சாயத்துகளில் சுமார் 60 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மருத்துவ வசதிக்காக சுமார் 25 கி.மீ., தொலைவில் உள்ள சித்தளந்தூர் செல்ல வேண்டி உள்ளது. எனவே, 6 பஞ்சாயத்துக்கும் மையப்பகுதியான வட்டூர் கஸ்பா கவுண்டம்பாளையம் பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் அமைக்க வேண்டும். திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சியில், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையமானது நிலை-2 மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் நிலையமாக உள்ளது. இங்கு, தினமும் சுமார் 400 புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாதம் 30 அறுவை சிகிச்சையுடன் கூடிய பிரசவங்கள் நடைபெறுகிறது. 1969 கட்டப்பட்ட பழைய கட்டிடத்தில் பிரசவ விடுதி செயல்பட்டு வருகிறது. புறநோயாளிகள் பிரிவில் புதிய கட்டிடமும் கூடுதலாக மகப்பேறு கட்டிடமும் அமைத்து தர வேண்டும்.  எலச்சிபாளையம் ஒன்றியம் திம்மராத்தம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியர் குடியிருப்பு அமைத்து  தரவேண்டும்.

Tags : Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்