ஆசிரியர்கள் இடைநீக்கத்திற்கு கண்டனம்

திருவில்லிபுத்தூர், பிப். 14: தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கடந்த ஜன. 22 முதல் போராட்டம் தொடங்கினர். ஜன.28ல் திருவில்லிபுத்தூரில் மறியல் நடந்தது. இது தொடர்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யபட்டனர். இதில், சுமார் 25 பேரை நடுவர் எண் 2ல் ஆஜர்படுத்தபட்டு பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்டனர். ஜன.29ல் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில், கைதான 25 நபர்களில் 48 மணி நேரத்திற்கு குறைவாக சிறையில் இருந்ததால், 15 பேர் அவரவர் பணியாற்றும் துறையில் கட்டுப்பாடு அலுவலர் மூலம் பணி ஏற்பு செய்து பணி ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கல்விதுறையில் 10 ஆசிரியர்களை மட்டும் பணி ஏற்கவிடமால் இடை நீக்கம் செய்துள்ளனர். இத்தகைய செயல் அரசு விதிகளுக்கு முரணாக பழி வாங்கும் நடவடிக்கையாக எங்களின் சங்கம் கருதுகிறது. மேலும் பணி நீக்கம் செய்ய்பட்ட ஆசிரியர்களை உடனடியாக பணி ஏற்க அனுமதிக்க வேண்டும்‘ என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

× RELATED விடைத்தாள் திருத்துவதில் அலட்சியம்...