பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை

திருப்புத்தூர், பிப். 14: திருப்புத்தூர் அருகே, கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக் பள்ளியில் மாணவர்கள் பெற்றோர்களுக்குப் பாதபூஜை செய்தனர்.
திருப்புத்தூர் அருகே, கீழச்சிவல்பட்டியில் ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசுத் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள், நேற்று பள்ளி வளாகத்தில் தங்களது பெற்றோர்களுக்கு பால் மற்றும் மலர்கள் கொண்டு பாதபூஜை செய்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் மகாலிங்கம் பேசுகையில், ‘மாணவர்களின் நல்லொழுக்கம், பெற்றோர்களை மதித்தல், பெற்றோர்களும் மாணவ, மாணவியரிடம் நல்ல நண்பர்களாகப் பழகுதல், பெற்றோர்களுக்குத் தரும் மரியாதை ஆகியவை குறித்து பேசினார். தொடர்ந்து பள்ளித் தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன், பள்ளிச் செயலர் குணாளன் ஆகியோர் மாணவர் மற்றும் பெற்றோரை வாழ்த்திப் பேசினர். ஆசிரியர்கள் மணி, சுரேகா, காளீஸ்வரி, ஜெய்சி கௌசல்யா ஆகியோர் கலந்து கொண்டனர். அறிவியல் ஆசிரியர் பழனியப்பன் நன்றி கூறினார்.

× RELATED மாணவ,மாணவிகளை அங்கீகாரமற்ற பள்ளியில் சேர்க்க கூடாது