திமுக ஊராட்சி சபைக் கூட்டம்

சிவகங்கை, பிப். 14: திருப்புவனம் கிழக்கு, மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மடப்புரம், பூவந்தி, பாப்பாகுடி, ஏனாதி, கணக்கன்குடி, பெத்தானேந்தல், கானூர், மழவராயனேந்தல், திருப்பாச்சேதி, லாடனேந்தல் ஆகிய ஊராட்சிகளில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் ஒன்றியச் செயலாளர்கள் கடம்பசாமி, வசந்தி சேங்கைமாறன் தலைமை வகித்தனர் சிவகங்கை மக்களவை தொகுதி பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம், மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன் மனுக்களை பெற்றனர்.
இதில் சாலை, குடிநீர், பஸ், கண்மாய் மராமத்து, முதியோர் உதவித்தொகை கோரி விடுத்திருந்தனர். முதியோர் தொகை நிறுத்தப்பட்டவர்களுக்கும் புதிதாக மனு செய்தவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை கிராம மக்கள் அளித்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருப்புவனம் நகர் செயலாளர் நாகூர்கனி, மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், ஈஸ்வரன், பிரகாஸ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ, மீனவரணி அமைப்பாளர் அண்ணாமலை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் அறிவுக்கரசு, தேவதாஸ், ஒன்றிய நிர்வாகிகள் மகேந்திரன், கெங்குராமன், சேதுபாண்டியன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

× RELATED திமுக பூத் கமிட்டியை எ.வ.வேலு ஆய்வு