பொன்னமராவதியில் குண்டும், குழியுமாக மாறிய சாலை பொதுமக்கள் அவதி

பொன்னமராவதி,பிப்.14: பொன்னமராவதி வலையபட்டி மலையாண்டி கோயிலில் இருந்து கழுதைபுரளி வழியாக  கோவில்பட்டி செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக  போக்கு வரத்துக்கு செல்ல முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. இதனால் இந்த சாலை  வழியாக பள்ளிகள் மற்றும் மணப்பட்டி, வலையபட்டி பகுதிகளுக்கு செலலும்  பொதுமக்கள் என பல்வேறு வகையான மக்கள் தினசரி சிரமத்துடன் சென்று  வருகின்றனர்.
எனவே இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும்  பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலையினை சீர்செய்து புதிதாக தார் போட வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

× RELATED காளையார்கோவில் அருகே குளமாக மாறிய சாலை