திருப்புவனம் அருகே புவி வெப்பமாதல் கருத்தரங்கம்

திருப்புவனம், பிப். 13: திருப்புவனம் அருகே சிவகங்கை ரோட்டில் அரசனூரில் உள்ள பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் புவி வெப்பமயமாதலை தவிர்ப்பது குறித்து அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாணவ, மாணவிகள் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவியல் விழா நேற்று தொடங்கியது.விழாவில் இலவச இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் அறிவியல் கண்காட்சி என பல்வேறு நிகழ்வுகள் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. துவக்க விழாவிற்கு தஞ்சாவூர் பிரிஸ்ட் பல்கலைக்கழக வேந்தர் முருகேசன் தலைமை வகித்தார். பிரிஸ்ட் பல்கலைக்கழக மதுரை வளாக இயக்குநர் கோயில்தாசன் மனோகரன் வரவேற்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் துவக்கி  வைத்து வாழ்வியல் சூழல் குறித்த கருத்தரங்கின் ஆய்வில் பயிற்சி கையேட்டை   வெளியிட்டார். அழகப்பா உயிரியல் துறைத்தலைவர் கருத்தப் பாண்டியன் பெற்றுக்கண்டார். சட்டக் கல்லூரி இயக்குநர் சீனிவாசன் நன்றி கூறினார். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சுந்தரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


× RELATED நடுவர்களுக்கான கருத்தரங்கம்