கிட் அண்டு கிம் பொறியியல் கல்லூரியில் அழகப்ப செட்டியார் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

காரைக்குடி, பிப். 13: காரைக்குடி கிட் அண்டு கிம் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரி வளாகத்தில் அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் 1964-1969ல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.கிட் அண்டு கிம் கல்லூரி இயக்குநர் அண்ணாமலை வரவேற்றார். கல்வி குழும தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். கலெக்டர் ஜெயகாந்தன் விழாவை துவக்கி வைத்தார். அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி முதல்வர் இளங்கோ, முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் ஜோதிகுமார், செயலாளர் அபுபக்கர், கல்லூரி ஆலோசகர் கலியமூர்த்தி, முதல்வர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED ஓடி விளையாடு பாப்பா!..