சாலை பாதுகாப்பு கருத்தரங்கம்

திண்டுக்கல், பிப்.13: திண்டுக்கல் வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கருத்தரங்கம் நடைபெற்றது.திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த கருத்தரங்கில் பள்ளி முதல்வர் சந்திரசேகர் வரவேற்றார். திண்டுக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி சக்திவேல் தலைமை தாங்கினார். திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ராஜேஸ்வரன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தர்மானந்தம், மணிவண்ணன், விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி ஒருங்கிணைப்பாளர் கார்த்திகைகுமார் நன்றி கூறினார். கருத்தரங்கில் திண்டுக்கல், வேடசந்தூர், வத்தலகுண்டு பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

× RELATED சாலை பாதுகாப்பு கருத்தரங்கம்