×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்திய நீதிபதி குழுவிற்கு 5.50 லட்சம் மதிப்பூதியம் கலெக்டருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை, ஜன.23: மதுரை அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் பொங்கலன்று ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஜன.15ல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் கேட்டு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தங்களுக்கும் உரிமை கோரி பலர் இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொண்டனர். கலெக்டர் தலைமையில் நடந்த பல கட்ட சமாதான கூட்டங்களில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.இதையடுத்து, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சி.ராகவன் தலைமையில், வக்கீல்கள் பி.சரவணன், என்.திலீப்குமார், ஆனந்த் சந்திரசேகர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழுவை அமைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இந்த குழுவிற்கு ஆலோசனை வழங்க, வழக்கு தொடர்ந்தவர்கள் அடிப்படையில் 16 பேரைக் கொண்ட ஆலோசனைக்குழுவும் அமைக்கப்பட்டது.இதையடுத்து இந்த குழுவினர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்தினர்.இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு மற்றும் குழுவினர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்திய குழுவினர், இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த கலெக்டர் நடராஜன், போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், எஸ்பி மணிவண்ணன், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் மற்றும் அரசு அதிகாரிகளின் பணியை ெவகுவாக பாராட்டினர்.ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்திய ஓய்வு நீதிபதி சி.ராகவனுக்கு மதிப்பூதியமாக ரூ.1.75 லட்சம், இவருக்கு துணையாக இருந்த வக்கீல்கள் 3 பேருக்கும் தலா ரூ.1.25 லட்சம் என ரூ.5.50 லட்சத்தை மதிப்பூதியமாக 3 நாட்களில் கலெக்டர் தரப்பில் வழங்க வேண்டும். இதற்கான அறிக்கையை ஜன.28ல் தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்..

Tags : Magistrate Court ,Collectorate ,
× RELATED உள்நோக்கத்துடன் பொய் குற்றச்சாட்டு...