×

துணைக்கோள் நகரில் வீட்டுமனை கேட்டு 2 லட்சம் பேர் விண்ணப்பம்?

மதுரை, ஜன. 23: துணைக்கோள் நகரத்திற்கான வீட்டு மனைக்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவம் கொடுக்க நேற்று கடைசி நாள் என்பதால், வாரிய அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம், மதுரை அருகே உச்சப்பட்டி, தோப்பூரில் துணைக்கோள் நகரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 40 மீட்டர் பரப்பளவில் ஒரு வீட்டுமனையாக சுமார் 1,150 வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டு மனையின் விலை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். இந்த வீடுகளை பொருளாதாரத்தில் பின்தங்கியோர், பிற்பட்டோர், ஆதிதிராவிடர், முன்னாள் ராணுவத்தினர், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் என பல்வேறு பிரிவாக பிரித்து விற்பனை செய்யப்படவுள்ளது.இந்த மனைகளை விற்பனை செய்ய கடந்த மாதம் முதல் மனுக்கள் வழங்கப்பட்டன. எல்லீஸ் நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் ஒரு மனு ரூ.105க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு நபருக்கு 5 மனுக்கள் வீதம் வழங்கப்பட்டது. மனுக்களை பெற இந்த அலுவலகத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். ஒரு நாளைக்கு ஆயிரம் மனு வீதம் மொத்தம் சுமார் 2 லட்சம் மனுக்களை வாரியம் விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது.மனுக்களை பூர்த்தி செய்து அத்துடன் பெயரை பதிவு செய்ய ரூ.200க்கு வங்கியில் டிடி எடுத்து அதனையும் சேர்த்து கொடுக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் கொடுக்க நேற்று கடைசி நாளாகும். கடைசி நாள் என்பதால், மனுக்களை கொடுக்க வாரிய அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது.

Tags :
× RELATED போலி போலீஸ் கைது