×

கோவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மஞ்சள் விலை குவின்டாலுக்கு ரூ.900 சரிவு

கோவை, ஜன.23: கோவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த விற்பனையில் மஞ்சள் விலை குவின்டாலுக்கு ரூ.900 சரிந்து, ரூ.5,100க்கு விற்றது.
 கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திங்கள் மற்றும் வியாழன் தோறும் மஞ்சள் ஏல முறையில் நடக்கிறது. அதன்படி நேற்று மாலை நடந்த ஏலத்தில் கோவனூர், கீரநத்தம், தென்னமநல்லூர், பூலுவபட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் விரலி மஞ்சள் 333 குவின்டால், கிழங்கு மஞ்சள் 81 குவின்டால் என 414 குவின்டால் விற்பனையானது. இதை பொள்ளாச்சி, கோவை, ஈரோடு பகுதியை சேர்ந்த வியாபாரிகள் வாங்கினர். இதில் விரலி ரகம் மஞ்சள் குவின்டால் சராசரி விலை குவின்டால் ரூ.6,600க்கும், கிழங்கு மஞ்சள் குவின்டால் சராசரி விலை ரூ.5,100க்கும் விற்றது. கடந்த ஏலத்தோடு ஒப்பிடுகையில் விரலி விலை அதே நிலையில் உள்ளது. கிழங்கு மஞ்சள் குவின்டாலுக்கு ரூ.900 சரிந்துள்ளது. விலை சரிவால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

Tags : Coimbatore ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை