×

எல்க்ஹில் முருகன் கோயிலில் தைப்பூச திருத்தேர் விழா

ஊட்டி, ஜன. 22: ஊட்டி எல்க்ஹில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருத்தேர் விழா நேற்று வெகுவிமா–்சையாக நடைபெற்றது.  ஊட்டி எல்க்ஹில் மலையில் 90 ஆண்டுகள் பழமையான பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இந்த முருகன் கோவில் அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவிலாகும். இந்த கோயில் 44 அடி உயர முருகன் சிலை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை பூசத்தன்று நடக்கும் தைபூச திருத்தேர் ஊர்வலம் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருத்தேர் விழா கடந்த 11ம் தேதி காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 20ம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக பூஜைகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று காலை 7 மணியில் இருந்து 11ம் நாள் பூஜை, பெருந்திரு முழுக்காட்டல் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மதியம் 12.05 மணியளவில் தைப்பூச திருத்தேர் ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்ட எஸ்.பி., சண்முகப்பிரியா கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார். எல்க்ஹில் பால தண்டாயுதபாணி கோயிலில் இருந்து புறப்படும் தேர் அங்கிருந்து ஊட்டி நகரில் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலம் வந்து மீண்டும் மாலையில் கோயிலை சென்றடைந்தது. இதில் ஏராளமான பக்தா–்கள் கலந்து கொண்டு சுவாமி தாிசனம் செய்தனா். ெதாடா்ந்து இன்று 12ம் நாள் மறுஅபிஷேகமும், நாளை விடையாற்றி, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதேபோல் அப்புகோடு ஆனந்தமலை முருகன் கோயில், மஞ்சூர் அருகேயுள்ள அன்னமலை முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தைப்பூசம் வெகுசிறப்பாக நடந்தது.

Tags : Thaipusa Amritsar Celebration ,Elkill Murugan Temple ,
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு