×

கோயில் நிலத்தில் டாஸ்மாக் கூடாது

விருதுநகர், ஜன. 22: விருதுநகர் கலெக்டரிடம் பாவாலி கிராம பொதுமக்கள் சார்பாக வடிவேல் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பாவாலி கிராமத்தில் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், குமரன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை தனிநபர் சிலர் ஆக்கிரமித்து போலி பட்டா தயாரித்து ‘பிளாட்’ போட்டு விற்பனை செய்து வருகின்றனர். கோயில் நிலங்களை பாதுகாக்க வேண்டிய, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இந்நிலையில், (சர்வே எண் 145) கோயில் நிலத்தில் மதுபான கடை அமைக்க வேலைகள் நடந்து வருகின்றன. இதனை தடுத்து நிறுத்தி, கோயில் நிலத்தை மீட்க வேண்டும். மேலும், சீனியாபுரத்தில் உள்ள பாவாலி பெருமாள் கோயிலுக்கு சொந்தமான (சர்வே எண் 31/3) 3 ஏக்கர் நிலம் உள்ளது. இதை சிலர் போலி பட்டா தயாரித்து, கலெக்டரின் அனுமதி பெற்று கிராவல் மண் அள்ளி விற்று விட்டனர். கிராமத்தில் இந்து சமய அறநிலையத்தை துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமித்து விற்பனை செய்து வருகின்றனர். னவே, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, பாதுகாக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும். மோசடி நபர்கள் மீதும், துணை போகும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.




Tags :
× RELATED வத்திராயிருப்பு அருகே ட்ரோனில்...