×

தண்டையார்பேட்டையில் பைப்லைன் உடைப்பால் குடிநீரில் கழிவுநீர் கலப்பு அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலை மறியல்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் உள்ள நெடுஞ்செழியன் நகர், நேதாஜி நகர், கருணாநிதி நகர், தமிழன் நகர், படேல் நகர் மக்களுக்கு பட்டேல் நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், இருந்து பைப்லைன் மூலம் மேற்கண்ட பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குடிநீர் சரியாக வரவில்லை என தெரிகிறது. மேலும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது இதனால், மக்கள் அவதிப்படுகின்றனர். இதுபற்றி குடிநீர் வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, பரபரப்பு நிலவியது. தகவலறிந்து ஆர்கே நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘‘குடிநீரில் கலந்துள்ள கழிவுநீரை பாட்டிலில் பிடித்து வைத்து போலீசாரிடம் காண்பித்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : road ,Tondiarpet ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி