22ம் தேதி மாநிலம் தழுவிய ஸ்டிரைக்கில் பங்கேற்க ஜாக்டோ-ஜியோ முடிவு

கோவை, ஜன. 18: கோவை மாவட்ட ஜாக்டோ ஜியோ சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. வரும் 22ம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்பது. கோவை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து வரும் 22ம் தேதி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது. ல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணிமாற்றம் செய்து கொண்டுவரப்பட்ட உத்தரவை புறக்கணிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திட்டமிட்டபடி கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

× RELATED 2ம் பாகத்தில் இன்ட்ரஸ்ட் இல்லை; சுசீந்திரன்