எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை, ஜன.18: புதுக்கோட்டை  பழைய பேருந்து நிலையம் அருகேஉள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக சார்பில் நகர  செயலாளர் பாஸ்கர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினர். இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் நகர் மன்ற தலைவர்  திவ்யநாதன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நகர செயலாளர் வீரமணி தலைமையில்   நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் ஏராளாமானோர்  கலந்துகொண்டனர்.கந்தர்வகோட்டை:  கந்தர்வகோட்டையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா ஒன்றிய அதிமுக சார்பாக கொண்டாடப்பட்டது.  ் ஒன்றியத் துணைச்  செயலாளர் குமார், பாசறை செயலாளர் அருண் தலைமையில் அதிமுகவினர்  எம்ஜிஆர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். பொன்னமராவதி: பொன்னமராவதி  அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதிமுக ஒன்றிய செயலாளர் பழனியாண்டி தலைமையில் கட்சி  அலுவலகம் முன்பு எம்ஜிஆர் படம் வைத்து மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல பேருந்து நிலையத்தில் எம்ஜிஆர் படம் வைத்து மாலை அணிவிக்கப்பட்டது. இதில் நகர செயலாளர் தங்கப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.அறந்தாங்கி: அறந்தாங்கியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில்,  அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமையில் வடக்கு ஒன்றிச் செயலாளர் வேலாயுதம் உள்ளிட்ட நிர்வாகிகள் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

× RELATED கருணாநிதி பிறந்தநாள் விழா: 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்