×

விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப திட்டங்கள் துணைவேந்தர் அட்வைஸ்

காரைக்குடி, ஜன. 18: மாவட்ட அளவில் திட்டங்கள் வகுக்கும்போது விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப திட்டங்களை தீட்டி அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு கல்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசந்திரன் தெரிவித்தார்.காரைக்குடி அருகே குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் 15வது அறிவியல் ஆலோசனை கூட்டம் நடந்தது. வேளாண்அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன் வரவேற்றார். குன்றக்குடிபொன்னம்பல அடிகளார் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கு தலைமைவகித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசந்திரன் பேசியதாவது: விவசாயிகளின் எதிர்கால தேவையை திட்டமிடவே இதுபோன்ற அறிவியல் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து துறைகளும் வேளாண் அறிவியல் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாயம் முன்னேற்றம் அடைந்தால்தான் நாடு சிறப்பாக இருக்கும். மாவட்ட அளவிலான திட்டங்கள் தீட்டும்போது வேளாண் விஞ்ஞானிகளையும் இணைத்துக்கொண்டு விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் திட்டங்களை தீட்டி அரசுக்கு சமர்பிக்க வேண்டும். கால்நடைகளுக்கு தடுப்பூசி முறைகளை காலம்தவறாமல் போட வேண்டும். கால்நடை பல்கலைக்கழகம் சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட உயர் தொழில்நுட்பங்கள் மற்றும் கோழி இனங்களை விவசாயிகள் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.தற்போது கருப்பு கோழி (கடக்னாத்) இனங்கள் விவசாயிகளிடம் பிரபலமாகி வருகிறது. கோழிகளுக்கு மாதிரைவடிவிலான தடுப்பு மருந்துகள் விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.இந்திய வேளாண் அறிவியல் கழக 10வது மண்டல தலைவர் பிரசாத், விரிவாக்க கல்வி இயக்குநர் ராமசாமி, முன்னாள் இயக்குநர் சுகித்குமார், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநர் பிலிப், கேவிகே விஞ்ஞானிகள் விமலேந்திரன், அழகுதுரை, தேன்மொழி, அழகப்பன், திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...