கபிலர்மலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

பரமத்திவேலூர், ஜன.11: பரமத்திவேலூர் அடுத்துள்ள கபிலர்மலையில்,  மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இதில், வருவாய்த்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு ₹5 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, 68 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 19 பேருக்கும், பத்து குடும்பத்தினருக்கு இயற்கை மரண உதவித்தொகை, 16 பயனாளிகளுக்கு வாரிசு சான்றுகள், 18 சிறுகுறு விவசாயிகளுக்கு சான்று, 23 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் என, 217 பயனாளிகளுக்கு ₹38 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கி பேசினார்.  தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.  இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு ஆர்டிஓ பாஸ்கரன், மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் துரை, மாவட்ட வழங்கல் அலுவலர் பர்கத் பேகம், தாசில்தார் ருக்குமணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

× RELATED நாமக்கல் அருகே கிராமங்களில் கடும் வறட்சி