நாமகிரிப்பேட்டையில் திமுக ஆலோசனை கூட்டம்

நாமகிரிப்பேட்டை, ஜன.11:நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதிகளில், திமுக ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் தலைமையில் நடந்தது. பேரூர் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, தேர்தல் பணிக்குழு செயலாளர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு, நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கி பேசினர். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பொன்னுசாமி, ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், பேரூர் செயலாளர்கள் ஜெயக்குமார், செல்வராஜ், இலக்கிய அணி புரலவர் தமிழழகன், மாணவரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், இளைஞரணி அமைப்பாளர்கள் சுரேஷ், வில்வகுமார், மூர்த்தி, அருள், தங்கராஜ், விஜய்பாபு, வெங்கடேஷ், தங்கராஜ், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED கெங்கவல்லி அருகே திமுக பொதுக்கூட்டம்