பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

பொன்னமராவதி, ஜன. 11: பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி ரேஷன் கடையில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.அதிமுக ஒன்றிய செயலாளர் பழனியாண்டி கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்கள் மற்றும் ரூ.ஆயிரம் கொண்ட பொங்கல் தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தார். இதில் ஆலவயல் கூட்டுறவு சங்க தலைவர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED ஆலங்குடி அருகே வடகாடு பாலசுப்பிரமணியர் கோயிலில் பால்குட விழா