பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை, ஜன.11: புதுக்கோட்டை, மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் கிரவுன் சிட்டி ரோட்டரி  கிளப் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரோட்டரி கிளப் தலைவர் அக்பர், இடைவினை மன்ற தலைவர் த கோகுல் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியைத் துவக்கி வைத்தனர்.இப்பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக டவுன் ஹாலை வந்தடைந்தது. பேரணியில் மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், உறுப்பினர்கள் மற்றும் கிரவுன் சிட்டி ரோட்டரி கிளப்  உறுப்பினர்கள் விழிப்புணர்வு வாசகங்கள்கொண்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர்.நிகழ்ச்சியில் மவுண்ட் சீயோன் பள்ளி முதல்வர் பாரதிராஜா, ஒருங்கிணைப்பாளர் கிருபா ஜெபராஜ் மற்றும் ரோட்டரி கிளப்  உறுப்பினர்கள் சுந்தரவேல், ஆரோக்கியசாமி, ஹான், வில்சன் ஆனந்த், பெலிக்ஸ் மற்றும் பிரசாத் மோகன்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

× RELATED ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி