தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க கூட்டம்

தேவகோட்டை, ஜன.11: தேவகோட்டை  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க கிளைக்கூட்டம்  கிளைத்தலைவர் ராசேந்திரன் தலைமையில் நடந்தது. போஸ், புரட்சித்தம்பி  முன்னிலை வகித்தனர். செயலாளர் ஆசிரியர் அன்பரசன் வரவேற்றார். எழுத்தாளர்  பிரபஞ்சன், தமிழ் அறிஞர் அறவாணன் மறைவிற்க அஞ்சலி செலுத்தினர்.  மாவட்டத்தலைவர் எழுத்தாளர் ஜீவசிந்தன், மாவட்டச்செயலாளர்  சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் இளைய தலைமுறையினர் வாசிப்பு பழக்கத்தை  ஏற்படுத்தக் கொள்ளவேண்டிய அவசியம் குறித்து பேசினார். மாணவர்கள் பாலாஜி,  சேகுவாரா, மார்க்சிஸ்ட் கார்க்கி, மாணவி அபிராமி, மற்றும் ஆசிரியை சத்யவாணி  ஆகியோர் அண்மையில் மாவட்ட அளவில் நடைபெற்ற பயிலரங்கத்தில் தங்களின்  படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தினர். அவர்களை பாராட்டி கௌரவித்தனர்.  தேவகோட்டையில் மார்ச் மாதம் முதல் வாரம் குறும்பட விழாவினை சிறப்பாக  நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. பொருளாளர் மரியஜெயபால் நன்றி கூறினார்.

× RELATED தலையாரிக்கு மிரட்டல்