ஓடும் பேருந்தில் பல்கலை மாணவியிடம் தகராறு

சிதம்பரம், ஜன. 11: சிதம்பரம் அருகே ஓடும் பேருந்தில் பல்கலைக்கழக மாணவியிடம் தகராறு செய்த மாணவர் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம் அருகே சித்தலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 8ம் தேதி பல்கலைக்கழகத்தில் வகுப்பு முடிந்ததும் பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் சுந்தர்ராஜ் மகன் சரண்ராஜ் (18) என்பவரும் அந்த பேருந்தில் பயணித்தார். அவர் மாணவியிடம் ஆபாசமாக பேசி அவரது கையை பிடித்து இழுத்து கீழே தள்ளி தகராறு செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மாணவி நடந்த சம்பவங்களை தனது தாயாரிடம் தெரிவித்தார்.  இதுகுறித்து மாணவியின் தாய் உமா அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து சரண்ராஜை கைது செய்தனர்.

× RELATED மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்...