×

மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்ல பேட்டரி கார் இயக்க கோரிக்கை

நாமக்கல், டிச.11: கலெக்டர் அலுவலகம் வரும் மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்வதற்கு, பேட்டரி காரை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தங்களது குறைகளை தெரிவிக்க ஏராளமான மாற்றுத்திறனாளிகள் வந்து செல்கின்றனர். மெயின்ரோட்டில் உள்ள நுழைவு வாயிலில் இருந்து, கலெக்டர் அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில் வரை மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்ல வேண்டும். கால் ஊனமடைந்த மாற்றுத்திறனாளிகள் மற்றொருவர் துணையுடன் தான் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல வேண்டியுள்ளது. உடன் வருவதற்கு யாரும் இல்லாத மாற்றுத்திறனாளிகள் தவழ்ந்து செல்லவேண்டிய அவல நிலை உள்ளது.

இதை தவிர்க்க, கடந்த ஓராண்டுக்கு முன்பு, கலெக்டர் அலுவலகம் வரும் மாற்றுத்திறனாளிகளை மெயின்கேட்டில் இருந்து கலெக்டர் அலுவலக வளாகம் வரை அழைத்து செல்வதற்கு சிறிய அளவிலான பேட்டரி கார் இயக்கப்பட்டது. ஆனால், கடந்த ஓராண்டாக அந்த பேட்டரி காரை காணவில்லை. அதுபற்றி எந்த தகவலும் இல்லை. எனவே, மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை போக்க, மீண்டும் பேட்டரி காரை இயக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




Tags :
× RELATED ₹5 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்