×

இளைய தலைமுறையை நல்வழிப்படுத்தும் வாழ்க்கை வழி காட்டியாக முதியோர் விளங்குகின்றனர் பெரம்பலூர் கலெக்டர் பேச்சு

பெரம்பலூர்,டிச.7: இளைய தலைமுறையை நல்வழிப்படுத்தும், வாழ்க்கை வழி காட்டியாக முதியோர் விளங்குகின்றனர் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா பேசினார். பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் சங்குப்பேட்டை சமுதாயக் கூடத் தில் முதியோர்கள் தினவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் சாந்தா தலைமை வகித்துப் பேசியதாவது :முந்தைய காலகட்டத்தில் கிராமங்களில் வாழ்ந்த குடும்பங்களில் முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துவந்தனர். இதன் காரணமாக முதியவர்களை முறையாகக் கவனித்து வந்தனர். நாளடைவில் சமூக மாற்றத்தின் காரணமாக தற்போதைய குடும்பங்களில் வாழும் வயதான முதியவரின் நலனில் அக்கரை செலுத்துவது குறைந்துள்ளது. தம் வாழ்நாளில் பல அனுபவங்களைக் கொண்ட முதியவர்கள்தான் வாழ்வின் ஏற்றத்தாழ்வு மற்றும் நல்லதுகெட்டது விஷயங்களை முழுமையாக அறிந்து, அதற்கேற் றார்போல் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இவ்வாறு வாழ்க்கையின் பல அனுபவங்களைக் கொண்ட முதியவர்கள்தான் இன்றைய இளைய தலைமுறையை நல்வழிப்படுத்தும், வாழ்க்கை வழிகாட்டியாக விளங்கி வருகின்றனர். எனவே முதியோரை ஆரோக்கியமுடன் வாழவும் அவர்களுக்குண்டான உரிமைகளை பெறவும் நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் முதியோர்களுக்கான சட்டங்கள் குறித்து வழக்கறிஞர் செந்தில்நாத னும், முதியோர்கள் உடல்நலம் பேணுதல்குறித்து ஆறுமுகமும் சிறப்புரை பேசினர். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 130 முதியோருக்கு உடல் எடை, ரத்தக் கொதிப்பு, சர்க்கரைஅளவு உள்ளிட்ட அடிப்படை பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு, மேற்கொண்டு சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு அரசு பொது மருத்துவமனையில் உரியசிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்அலுவலர் அழகிரிசாமி, மாவட்ட சமூகநல அலுவலர்(பொ) பூங்கொடி, தாசில்தார் பாரதிவளவன், பாதுகாப்பு அலுவலர் முத்துச்செல்வி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Tags : collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...