×

அமராவதி தரைப்பாலம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர்,டிச.7: கைவிடப்பட்ட அமராவதி தரைப்பாலத்தை செப்பனிட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்,கரூர்  பசுபதிபாளையம் - கருப்பாயிகோயில் தெரு இடையே அமராவதி ஆற்றின் குறுக்கே தற்  காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. கடந்த 5ஆண்டுகளுக்கு முன்னர்  பசுபதிபாளையம் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும்  பணிநடை பெற்றதால்  அந்த இடத்தில் இருந்த பழைய பாலம் இடித்து அகற்றப்பட்டது. கட்டுமானப்பணிகள்  தொடர்ந்து நடை பெற்று வந்தது. தற்போது பணிகள் முடிந்து உயர் மட்டப்பாலம்  பயன் பாட்டிற்கு வந்து விட்டது. பாலம் கட்டுப்பட்டு விட்டதால் பழைய தரை  மட்ட தற்காலிக பாலம் கைவிடப்பட்டு விட்டது. நெடுஞ்சாலைத்துறை மற்றும்  நகராட்சி சார்பில் அவ்வப்போது தரைப்பாலம் செப்பனிடப்பட்டு வந்த நிலையில்  தற்போது எந்த பணியும் மேற் கொள்வதில்லை.

அவ்வப்போது அமராவதி ஆற்றில்  நீர்வரத்து இருக்கும் போது இங்கு அமைக்கப்பட்டிருக்கும் குழாய் வழியாக  தண்ணீர் செல்கிறது. எனினும் மேல் பகுதியில் உள்ள மண் அரிப்பு ஏற்பட்டு  கரைந்து விட்டது. குழாயில் நடந்து சென்று மக்கள் குளித்தும் துணிகளை  துவைத்தும் வருகின்ற னர். கருப்பாயிகோயில்தெரு, பசுபதிபாளையம்  பகுதியில் வசிப்பவர்கள் நடந்து செல்வதற்கு இந்த பாலத்தை பயன்படுத்தி  வந்தனர்.இருசக்கர வாகனங்களில் சென்று வந்தனர். தற்போது சிதில மடைந்து  இருப்பதால் நடந்து கூட செல்லமுடியாத நிலை உள்ளது. இந்தபாலத்தை செப்பனிட்டு மாற்றுப்பாதையாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Amaravathi ,
× RELATED வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம்...