×

கந்தர்வகோட்டை பகுதியில் நெடுஞ்சாலைகளில் வெட்டப்பட்ட மரங்கள் அனுமதியுடன் கொண்டு செல்லப்படுகிறதா? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கந்தர்வகோட்டை,டிச.6: நெடுஞ்சாலைகளில் வெட்டப்பட்ட மரங்கள் வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லபடுகின்றன உரிய அனுமதி பெற்று செல்கின்றனவா? என்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.கந்தர்வகோட்டை பகுதியில் கஜா புயல் காரணமாக நெடுஞ்சாலையில் உள்ள பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலையில் போக்குவரத்து சரி செய்ய ஆங்காங்கே மரங்கள் வெட்டி சாலையின் ஓரத்தில் போடப்பட்டது.ஆனால் நெடுஞ்சாலைத் துறையினர் அனுமதி பெற்று வெட்டிய மரங்கள் லாரி, லாரியாக கொண்டு செல்லப்படுகிறதா என ஐயம் சமூக ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. பல லாரி லோடுகள் அனுமதியில்லாமல் சில அதிகாரிகளின் ஒப்புதலுடன் எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.கஜா புயல் காரணமாக நெடுஞ்சாலைகளில் வெட்டப்பட்ட மரங்கள் உரிய அனுமதியோடு தனியார் கொண்டு செல்கின்றனரா  என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தாலுகா நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : area ,Gandharvatte ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...