×

அரசு கல்லூரி மைதானத்தில் மண் குவியல் விளையாட முடியாமல் மாணவர்கள் அவதி

ஊட்டி, நவ. 16: ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானம் சமன் செய்வதற்காக மண் கொட்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் சீரமைக்கப்படாமல் உள்ளதால் மாணவர்கள் விளையாட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட மைதானத்தில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால், கடந்த இரு ஆண்டுகளாக இந்த மைதானத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விளையாட்டு வீரர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஊட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
 

இந்நிலையில், இந்த மைதானம் மேடும் பள்ளமாக உள்ளதால், அதனை சரி செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் மைதானம் முழுக்க மண் கொட்டப்பட்டது. மைதானத்தில் அங்காங்கே இந்த மண் குவியல்கள் உள்ளன. கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் மைதானத்தை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், கல்லூரி மாணவர்கள் மற்றும் விளயைாட்டு வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 எனவே, விளையாட்டுத்துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் இந்த மைதானத்தை சமன் செய்யும் பணிகளை உடனடியாக துவக்க வேண்டும். மைதானத்தில் கொட்டப்பட்டுள்ள மண் குவியல்களை உடனடியாக சமன் செய்யும் பணிகளுக்கு பயன்பத்த வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : government college grounds ,
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு