×

செல்போன் இல்லாததால் செக்போஸ்ட் ஊழியர்கள் அவதி

உடுமலை, நவ.15:உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில், ஒன்பதாறு செக்போஸ்ட் முதல் சின்னாறு செக்போஸ்ட் வரை வனப்பகுதியாகும். இரு மாநிலங்கள் இடையே சமூக விரோதிகள் சந்தன மரம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தல் குறித்து இரு செக்போஸ்ட்களிலும் உள்ள ஊழியர்கள் தகவல் பரிமாறிக்கொள்வது வழக்கம். இதற்காக அவர்களுக்கு வனத்துறை சார்பில் வில்போன் வழங்கப்பட்டிருந்தது. இரு செக்போஸ்ட்களிலும் வாகன எண் பதிவு செய்யப்படுகிறது.கடத்தல் பேர்வழிகள் ஒரு செக்போஸ்ட்டில் தப்பினால் வில்போன் தகவல் மூலம் அடுத்த செக்போஸ்டில் மடக்கி பிடித்து விடுவார்கள்.ஆனால், கடந்த ஒரு மாதமாக செக்போஸ்ட் ஊழியர்களிடம் வில்போன் இல்லை.

வன அதிகாரிகள் அதை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதனால் வன ஊழியர்கள் தற்போது தகவல் பரிமாற்றத்தில் சிரமப்படுகின்றனர்.உயர்அதிகாரிகளின் உத்தரவு கூட தபால்மூலம்தான் வழங்கப்படுகிறது.இதுபற்றி வன அதிகாரிகளிடம் கேட்டபோது,` டவர் பிரச்னை காரணமாக வில்போன் வழங்கப்படவில்லை. தனியே டவர் அமைக்க வேண்டி உள்ளது. இதற்கு நிதி ஒதுக்கீடு இல்லை. எனவே, போன் வழங்கப்படவில்லை’ என்றனர்.

Tags : Checkpost staff ,
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ