×

நிலவேம்பு கசாயம் வழங்கல்

பொன்னமராவதி, நவ.15:  பொன்னமராவதி அருகே அருகே உள்ள கேசராபட்டியில் குழந்தைகள் தினவிழா, நிலவேம்பு கசாயம் வழங்குதல், சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமை வலையபட்டி அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் தாமரைச்செல்வன் தொடங்கி வைத்தார். சர்க்கரை நோய் கண்டறியும் முகாமை பொன்னமராவதி சிட்டி லயன்ஸ் சங்கத்தலைவர் பிரவீன்குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. இதனையொட்டி முன்னாள் பிரதமர் நேருவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு  அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி குழந்தைக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் டாக்டர் கோபாலகிருஷ்ணன், தலைமையாசிரியர் ஜெயஜோதி மற்றும் ஆசிரியர்கள், அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் மேலத்தானியம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சடையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் சித்த மருத்துவர் மாமுண்டி நிலவேம்பு கசாயம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். கறம்பக்குடி:  தமிழகத்தில் தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் குழ.சண்முகநாதன் தலைமை வகித்து குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் முருகேசன், நகர செயலாளர் சதக்கத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது வடக்கு மாவட்ட துணை செயலாளர் குணசேகரன் மற்றும் அமமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

Tags :
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா