×

திமுக உறுப்பினர் அட்டை வழங்கல்

சிவகங்கை, நவ.14: சிவகங்கையில் நகர் திமுக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர் தனசேகரன் தலைமை வகித்தார். சென்னை வட்ட கழக செயலாளர் முருகேசன், சிவகங்கை நகர் செயலாளர் துரைஆனந்த் முன்னிலை வகித்தனர். நகர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. வார்டு செயலாளர்களிடம் வார்டு உறுப்பினர்களின் உறுப்பினர் அட்டை ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, முன்னாள் நகர்மன்றத் தலைவர்கள் சாத்தையா, நாகராஜன், மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் அழகர்சாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், நகர் அவைத்தலைவர் மதார், நகர் துணை செயலாளர்கள் வீனஸ்ராமநாதன், சரவணன், மாவட்ட பிரதிநிதி ஜெயகாந்தன், பொருளாளர் முத்துராக்கு, முன்னாள் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ராஜபாண்டியன், முன்னாள் நகர செயலாளர் திருஞானம், நகர இளைஞர் அணி அமைப்பாளர் அயூப்கான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திருப்புவனத்தில் மேற்கு, கிழக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் திமுக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தலைமை வகித்தார். சென்னை கே.கே.நகர் பகுதி வட்ட செயலாளர் செந்தில்குமார் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் வசந்திசேங்கைமாறன், கடம்பசாமி, பேரூர் கழக செயலாளர் நாகூர்கனி, மாவட்ட பிரதிநிதி முத்துராமலிங்கம், ராமலிங்கம், பிச்சைமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி