×

கேட்வால்வில் இருந்து கசியும் தண்ணீரால் சுகாதார கேடு தடுத்து நிறுத்த கோரிக்கை

கரூர், நவ. 8: கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் கடைவீதியில் கேட்வால்வில் இருந்து கசிந்து வெளியேறும் தண்ணீர் சாலையோரம் செல்வதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் கேட்வால்வு பகுதி உள்ளது. கேட்வால்வில் இருந்து வெளியேற்றப்படும் குடிநீரை ராயனூர், தாந்தோணிமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து பிடித்து செல்கின்றனர். கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிய சமயங்களில் எல்லாம் கேட்வால்வில் இருந்து வெளியேறும் தண்ணீர்தான் பொதுமக்களுககு மிகவும்
உதவியாக இருந்தது. இந்நிலையில், கேட்வால்வில் இருந்து தினமும் தண்ணீர் கசிவு ஏற்பட்டு, இலங்கை தமிழர்கள் முகாம் நுழைவு வாயில் வழியாக தண்ணீர் சாலையோரம் கசிந்து நீண்ட தூரம் செல்கிறது. தண்ணீர் செல்லும் சாலையோரம் மட்டன் கடை, மீன்கடை போன்றவை உள்ளன. இந்த தண்ணீருடன், மாமிச கடைகளின் கழிவுகளும் சேர்ந்து சாலையோரம் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு தண்ணீர் கசிவினை நிரந்தரமாக தடுத்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும்
எதிர்பார்க்கின்றனர்.

Tags : Catwalk ,
× RELATED சின்னாளபட்டியில் கேட்வால்வு தொட்டியில் தேங்கும் நீரால் நோய் அபாயம்