×

சின்னாளபட்டியில் கேட்வால்வு தொட்டியில் தேங்கும் நீரால் நோய் அபாயம்

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் தொற்றுநோயை பரப்பும் இடமாக பேரூராட்சி குடிநீர் கேட் வால்வுகள் உள்ளன. இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு காந்தி மைதானம், சோமசுந்தரம் காலனி, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை தண்ணீர்தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டு கேட் வால்வுகள் மூலம் சீராக குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் முறையான பராமரிப்பில்லாததால், கேட் வால்வு தொட்டிகளில் கசிவு நீர் தேங்கி கொசு உற்பத்தி கூடமாக மாறி வருகிறது. காமராஜர் சாலையில் உள்ள அரசு வங்கி வாசல் முன்புள்ள பேரூராட்சி குடிநீர் கேட்வால்வில் இருந்து வெளியேறும் கசிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதிமக்கள் கொசுக்கடிக்கு அவதியாவதுடன், பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Chinnalapatti , Cinnalapatti, catwalk tank, disease, danger
× RELATED சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40...