×

குமரி மாவட்டத்தில் நான்குவழி சாலை பணிகள் 60 சதவீதம் நிறைவு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல்

நாகர்கோவில், அக்.18:  குமரி மாவட்டத்தில் நான்குவழி சாலை பணிகள் 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ெதரிவித்தனர். இந்திய தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் முத்துடையார், தொழில்நுட்ப பிரிவு மேலாளர் பிரதீப் ஆகியோர் வெளியிட்ட செய்தி குறிப்பு: மத்திய அரசின் சாலை மற்றும் தரைவழி போக்குவரத்து அமைச்சகம் மூலம் கேரளா, தமிழ்நாடு எல்லை முதல் கன்னியாகுமரி வரையிலும், நாகர்கோவில் முதல் காவல்கிணறு வரையிலும் புதிய 4 வழி சாலை பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 36 குழாய் பாலங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. 35 குழாய் பால பணிகள் நடைபெற்று வருகிறது. 33 சதுரபால பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 35 சதுரபால பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. 13 வாகன கீழ்பாதை பணிகள் நடைபெற்றுள்ளது. 9 பாதசாரிகள் கீழ்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு பெரிய பாலம் கட்டும் பணி நடந்துள்ளது. ஒரு வாகன மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது. 5 சிறிய பாலங்கள் கட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது.

8 பாலப்பணிகள், 2 ரயில்வே மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் காவல்கிணறு முதல் தோவாளை வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை சுமார் 14 கிலோ மீட்டர் காங்கிரீட் சாலை அமைக்கபட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. கன்னியாகுமரி முதல் வழுக்கம்பாறை வரை சுமார் 6 கிலோ மீட்டர் சாலை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தயார் நிலையில் உள்ளது. 4 வழிசாலை பணிகள் 24 மணி நேரமும் இரவு பகலாக நடந்து வருகிறது.2 ரயில்ேவ மேம்பாலங்களும், குழித்துறை தாமிரபரணி ஆற்றுபால பணிகளும் நடந்து வருகிறது. தாமிரபரணியில் நீர் வரத்து அதிகரித்த நிலையிலும், மழை காரணமாகவும். குளங்களில் நீர் நிரம்பி மண் எடுக்க முடியாததாலும் சில வேலைகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் மண் சரிவு ஏற்படும் இடங்களில் நவீன தொழில்நுட்ப பணிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் எதிர்கால பயன்பாட்டை கருத்தில் கொண்டு பணிகள் தர உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 60 சதவீதத்துக்கும் மேல் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : National Highway Department ,district ,Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...