×

தேவதானப்பட்டியில் மர்மக்காய்ச்சல்

தேவதானப்பட்டி, அக். 16: தேவதானப்பட்டியில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இதனால் கிராமத்தில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு பரிசோதனை நடத்தி வருகின்றனர். தேவதானப்பட்டி டிவி நகரைச் சேர்ந்தவர் பெருமாள்(45). இவருக்கு கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இவரை
நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாக கூறப்படுகிறது. தேவதானப்பட்டி டிவி நகர் பகுதியில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு வேறு எவருக்கும் காய்ச்சல் இருக்கிறதா என பரிசோதித்து வருகின்றனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

Tags :
× RELATED கண்டமனூர் அருகே சூறாவளி காற்றுடன் திடீர் மழை: வீட்டின் மேற்கூரை பறந்தது