×

சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி தென்காசியில் நூதன போராட்டம்

தென்காசி, அக். 16:  தென்காசியில்  சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி  முன்னாள்  கவுன்சிலர் நூதன போராட்டம் நடத்தினார்.
தென்காசியில் மவுண்ட்ரோடு முதல் வாய்க்கால் பாலம் வரையிலான பிரதான சாலை மற்றும்  குறுக்குச்சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இதை சீரமைக்க வலியுறுத்தி முன்னாள் கவுன்சிலர்  ராசப்பா, சாலையில் நாற்று நடுதல், மாடு, கன்றுகளுடன் மனு கொடுத்தல் என பல்வேறு  போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை இல்லை.
 இதையடுத்து நூதன போராட்டம் நடத்த முடிவுசெய்தார். இதன்படி 30க்கு 8 அடி அளவுள்ள ராட்சத பிளக்ஸ் பேனரில் அப்பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று முதல்வருக்கு அனுப்பும்  போராட்டத்தை நடத்தினார்.
இதனை முன்னிட்டு நேற்று மவுண்ட் ரோடு பகுதியில்  ராட்சத பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் புதுப்பள்ளி  ஜமாத் தலைவர் தாதாபீர், திமுக இஞ்சி இஸ்மாயில், விடுதலை சிறுத்தைகள் கட்சி  சித்திக், காங்கிரஸ் காதர்மைதீன், எஸ்.டி.பி.ஐ.திவான்ஒலி, இந்திய தேசிய  லீக் சேட், மமக அயூப், நல்லவர்சேட், அமமுக ராஜாமுகம்மது, சமூக சேவர்  முஸ்தபா, கலைமான்ஒலி, முஸ்லிம் லீக் இப்ராகிம், பழனிபாபா பாசறை சாதிக்அலி  மற்றும் பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். குறிப்பாக வாகனஓட்டிகள் ஆர்வத்துடன் காலை முதல் இரவு வரை கையெழுத்திட்டனர். இதையடுத்து இதை கூரியர் மூலம் முதல்வர் அலுவலகத்திற்கு இன்று (15ம் தேதி) ராசப்பா அனுப்பி வைக்கிறார்

Tags : Tenkasi ,roads ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...