×

கொசுப்புழு உற்பத்தியாகாமல் வீடுகளை சுகாதாரமாக வைக்க 10 நாள் அவகாசம்: கலெக்டர் அறிக்கை

திருவள்ளூர், அக். 16: கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் வீடு, தனியார் நிறுவனங்களை சுத்தமாக வைத்திருக்க வைத்திருக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடந்துவருகிறது. கொசு ஒழிப்பு பணிக்காக பணியாளர்கள் செல்லும்போது வீடுகள், பள்ளி வளாகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், கட்டுமானம் நடைபெறும் இடங்கள், காலி மனைகள் மற்றும் மருத்துவமனைகளில் மழைநீர் தேங்குமாறு, வெளிப்புறங்களில் போடப்பட்டுள்ள உடைந்த பானைகள், மின்சாதனங்கள், பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள், சிமென்ட் தொட்டிகள், தேங்காய் சிரட்டைகள் மற்றும் டயர்களில் டெங்கு கொசுவை உருவாக்கும் புழுக்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் 14ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை உள்ள நாட்களில், தங்களது வீடுகளையும், அலுவலக வளாகங்களையும் சுத்தப்படுத்திக்கொள்ள அவகாசம் அளிக்கப்படுகிறது. வரும் 25ம் தேதி முதல் அரசு அலுவலர்கள் ஆய்வுக்கு வர உள்ளனர். அப்போது வீடுகளிலோ, அலுவலகத்திலோ கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் இருந்தால், அந்த வீட்டிற்கும், வணிக வளாகத்திற்கும், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

Tags : Collector ,homes ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...