×

நாமக்கல்லில் புத்தக கண்காட்சி தொடக்கம்

நாமக்கல், அக்.12: நாமக்கல் பூங்கா சாலையில், நூலகத்துறை சார்பில் புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதை கலெக்டர் ஆசியாமரியம் திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் குழந்தைகளுக்கான நூல்கள், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், கம்ப்யூட்டர், இன்டர்நெட், இலக்கியம், திறனாய்வு நூல்கள், சமூகஅறிவியல், வரலாறு, கதைகள், கட்டுரைகள், கைத்தொழில், சிறுதொழில்கள், சுயமுன்னேற்ற நூல்கள், அகராதிகள், இலக்கணம், பொதுஅறிவு நூல்கள், சமையல், எண்கணிதம் (ஜோதிடம்) பொது நூல்கள் மற்றும் சிறந்த கல்வி அறிஞர்கள், பிரபல எழுத்தாளர்கள் எழுதிய அனைத்து விதமான நூல்களும் ஆயிரக்கணக்கில் இடம்பெற்றுள்ளன.

இந்திய படைப்பாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த 58 பதிப்பகங்களின் நூல்கள் இடம்பெற்றுள்ளது. காலை 10 முதல் இரவு 9 மணி வரை செயல்படும் கண்காட்சி, வருகிற 24ம் தேதி வரை செயல்படும். அனைத்து நூல்களும் 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. கண்காட்சி தொடக்க விழாவில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட நூலக அலுவலர் பாலகிருஷ்ணன்,  மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் ஜோதிலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Book Fair ,Namakkal ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...