×

மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உதவிட சட்டப்பணிகள் ஆணைக்குழு தயார்

பெரம்பலூர்,அக்.12:  மனவளர்ச்சி குன்றியவர்களுக்கும், மனசிதைவுக்கு ஆளானவர்களுக்கும் உதவிட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு எப்போதும் தயாராக இருக்கிறது என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் கூறினார்.உலக மனநலதினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், வேலா கருணை இல்லமும் இணைந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சட்டஉதவி விழிப்புணர்வு முகாமை நடத்தியது. வேலா கருணை இல்ல நிர்வாகி அருண்குமார் வரவேற்று பேசினார். பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான பாலராஜ மாணிக்கம் தலைமை வகித்து பேசியதாவது:மனவளர்ச்சிக் குன்றியவர்களுக்கும், மனசிதைவுக்கு ஆளானவர்களுக்கும் உதவிட தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு எப்போதும் தயாராக இருக்கிறது. அதனை நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும். மனநல மருத்துவர்கள், பொது மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், சமூக சட்டதலைவர்கள் அனைவரும் இம்மாதிரியான இல்லங்களுக்கு அடிக்கடி வருகை புரிந்து அவர்களின் குறைகளை நீக்க தக்க உதவிபுரிவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முரளிதரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வள்ளுவன்நம்பி, அட்வகேட்ஸ் அசோசியேசன் சங்க தலைவர் முகமது இலியாஸ், மூத்த வழக்கறிஞர் பிரசன்னன், வழக்கறிஞர் சங்க செயலாளரும், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முகாம் ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி செய்திருந்தார்.

Tags : Legal Services Commission ,
× RELATED நலத்திட்ட உதவிகள் கிடைக்காவிட்டால்...