×

அதிமுக அரசில் ஊழல், கைது நடவடிக்கை தொடர்கிறது

கரூர், அக்.12: அதிமுக அரசில் ஊழல், கைது நடவடிக்கை தொடர்கிறது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு உள்ளது. ஒரு கருத்துக்கணிப்பை வைத்து பேச முடியாது. ஹைட்ரோ கார்பன் போன்ற எந்த திட்டங்களும் மக்களுக்கு எதிராகவோ, திணிக்கவோ இல்லை. தீங்கு ஏற்படும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தாது. எச்.ராஜா, கருணாஸ் பேசியதை சுட்டிக்காட்டி ஒருவரை மட்டும் கைது செய்வது பாரபட்சம் என்கிறார்கள். இருவர் பேசியதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

கவர்னர் பற்றி எழுதியதற்காக நக்கீரன்கோபால் மீது நடவடிக்கை எடுத்தது மாநில அரசும், போலீசும்தான். அதிமுக அரசில் ஊழல் , கைது நடவடிக்கை என தொடர்கிறது. ஆதாரங்கள் சிக்கும்போது கவர்னர் நடவடிக்கை எடுப்பார்.
ஊழல் அரசை நீக்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை. ஏற்கனவே இந்த அரசைதான் பாஜக இயக்குகிறது என்கிறார்கள், அது உண்மையல்ல. எம்எல்ஏக்கள் நீக்கம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தான் முடிவு ஏற்படும். மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறிய கருத்தை திரித்து வெளியிட்டுவிட்டார்கள். அதனை அவர் தெளிவுப்படுத்தியிருக்கிறார். இவ்வாறு அவர்
கூறினார்.

Tags : arrest ,government ,AIADMK ,
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...