×

பெண்கள் தங்கும் விடுதிகளை முறைப்படி பதிய வேண்டும்

கரூர், அக்.12:  பெண்கள் தங்கும் விடுதிகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். சமூகநலன், சத்துணவு திட்டத்துறையின் மூலம் வெளியிடப்பட்ட அரசாணைகளின் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலம் நடத்தப்படும் பெண் குழந்தைகள், வளர்இளம் பெண்கள், சிறார்கள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகள், இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள், இல்லங்கள் நெறிமுறைப்படுத்தும் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு இயங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் விடுதிகள், இல்லங்களுக்கான பதிவு பெறுதல் மற்றும் ஆய்வு மேற்கொள்ளுதல் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து பதிவு செய்யப்படாமல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மதம் சார்ந்த நிறுவனங்கள் தொழிற்சாலைகள், ஆகிய தனியார் மற்றும் தனிநபரால் நடத்தப்பட்டு வரும் விடுதிகள், இல்லங்கள் தங்களது கருத்துருக்களை விரைந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்திற்கு சமர்ப்பித்து தங்களது பதிவினை பெற்றுக்கொள்ள வேண்டும்.  மேலும், இதுகுறித்த தகவலுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சாமிகாம்ப்ளக்ஸ், வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில், மாவட்ட ஆட்சியரகம் அருகில் கரூர் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

Tags : Women ,hostels ,
× RELATED ‘மேட்ரிமோனியல்’ இணையதளம் மூலம் 7...